மத்திய பிரதேசத்தில் ரயிலில் விழுந்து உயிரிழந்த நபர்-பெங்களுருவில் மீட்கப்பட்ட தலை

Subscribe our YouTube Channel

மத்தியபிரதேச மாநிலத்தின் பெத்துல் பகுதியில் கடந்த 3ம் திகதி அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர் உயிரிழந்த நபரின் சிதறிய உடற்பாகங்களை சேர்ந்தனர்.ஆனால் தலை மட்டும் கிடைக்கவில்லை.மீட்கப்பட்ட பக்கங்களை பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெத்துல் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் கடந்த 4ம் திகதி டெல்லியில் இருந்து பெங்களூர் சென்ற ராஜதானி விரைவு ரயில் எஞ்சினில் மனித தலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து ஊழியர்களால் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அந்த மனித தலை மத்தியப் பிரதேசத்தில் ரயிலில் சிக்கி உயிரிழந்தவரின் உடல் என்பது தெரிய வந்தது.

இதனை அடுத்து பெத்துல் விரைந்த பெங்களூர் காவல்துறையினர் குறித்த நபருடையது தான் என உறுதி செய்தனர். இருப்பினும் தலையை பெற அவரின் குடும்பத்தினருக்கு வசதி இல்லாத காரணத்தினால் அந்த தலையை பெங்களூருவிலேயே காவல்துறையினரால் புதைக்கப்பட்டது.தொடர்ந்து விபத்தில் உயிரிழந்தார் அல்லது தற்கொலை செய்து கொண்டாரா.?அல்லது கொலை செய்யப்பட்டாரா போன்ற கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.