ஒரே மாதத்தில் 2 பெண்களுடன் காதல் திருமணம் செய்து கொண்ட 23 வயது இளைஞர்-சிறையில் கம்பி எண்ணும் பரிதாபம்.!

Subscribe our YouTube Channel

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பெருவாங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் பூவரசன்.22 வயதாகும் இவர் அதே பகுதியை சேர்ந்த நர்மதா என்னும் பெண்ணை காதலித்து வந்தார்.இருவரும் நெருங்கி பழகியதால் நர்மதா கர்ப்பம் ஆகியுள்ளார்.இதனால் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி நர்மதா வற்புறுத்தியுள்ளார். ஆனால் பூவரசன் தலைமறைவாகியுள்ளான். அதனை தொடர்ந்து நர்மதா காவல்துறையில் புகார் அளித்தார்.அதன் அடிப்படையில் பூவரசனை கண்டறிந்து நர்மதாவுடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில் சில நாட்களின் பின் பூவரசனின் செல்போனுக்கு அடிக்கடி அழைப்பு வந்துள்ளது.

அதனை ஆராய்ந்ததில் கல்லூரி மாணவியான தீபிகா என்னும் பெண்ணை பூவரசன் காதல் வலையில் வீழ்த்தியிருப்பது தெரிய வந்தது.இதனை அறிந்த மனைவி நர்மதா பூவரசனிடம் கேட்பதற்குள் தீபிகாவை பூவரசன் திருமணம் செய்துள்ளார்.

பின் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து இருவரையும் கண்டுபிடித்த காவல்துறையினர் மாணவி தீபிகாவுக்கு அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்துள்ளனர்.அத்துடன் ஒரே மாதத்தில் 2 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த பூவரசனை காது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.