கொலை செய்யப்பட்ட திருநங்கையின்உடல் மீது கொட்டப்பட்டிருந்த உப்பு-விசாரணையில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்

Subscribe our YouTube Channel

கோவை மாவட்டம் சாய் பாபா நகரை சேர்ந்தவர் திருநங்கையான சங்கீதா.இவர் சில தினங்களுக்கு முன் கொலை செய்யப்பட்ட நிலையில் கடந்த புதன்கிழமை அவரது வீட்டில் உள்ள பிளாஸ்டிக் ரம்மில் சடலமாக மீட்கப்பட்டார்.அவரது உடல் அழுகி துர்நாற்றம் வீசாமல் இருப்பதற்காக உப்பு கொட்டப்பட்டிருந்தது.இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் நாகபட்டினத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். அவனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் திருநங்கை சங்கீத தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அதனால் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் குறித்த இளைஞர் கூறியவை அனைத்டும் பொய் என தெரிய வந்துள்ளது.குறித்த இளைஞர் திருநங்கை சங்கீதாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.குறித்த இளைஞர் திருநங்கை சங்கீதாவை தொடர்பு கொண்டு ஐடிஐ படித்து விட்டு வேலை தேடி வருகிறேன்.

உங்களது உணவகத்தில் வேலை கிடைக்குமா எனக் கேட்டுள்ளன். இதனை நம்பிய சங்கீதா பரிதாபப்பட்டு கடந்த மாதம் பிரியாணி மாஸ்டராக அவனை வேலைக்கு சேர்த்துள்ளார்.இருப்பிடம் இல்லாமல் தவித்த அவனுக்கு தங்குவதற்கு வீடும் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக ராஜேஷ் சங்கீதாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளான்.இதற்கு ஒப்புக்கொள்ளாத அவர் காவல்துறையில் சொல்லிவிடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜேஷ் அவரை கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.