இரு மூளைகளுடன் பிறந்த இருதலை நாகம்-இரைகளை பிடிக்கமுடியாமல் திணறல்.!

Subscribe our YouTube Channel

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள மிருகக்காட்சி சாலையில் இரண்டு தலைகளை கொண்ட நாகப்பாம்பு உள்ளது.இது போன்ற இரு தலை நாகம்,5 தலை நாகம் போன்றவைகளின் கதைகளை இதிகாசங்கள் மற்றும் புராண கதைகளில் கேட்டிருப்போம்.ஆனால் பலரும் இது போன்றவை இருக்க வாய்ப்புள்ளதா என சந்தேகம் கொள்வார்கள். இக்காலகட்டத்தில் இது போன்ற உயிரினங்கள் காணப்படுவதை இணையத்தின் வாயிலாக பல்வேறு வழிகளில் அறிந்து கொள்கிறோம்.அந்த வகையில் தற்போது இரு தலைகளை உடைய நாகப்பாம்பு அமெரிக்காவில் உள்ள மிருகக்காட்சி சாலையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த இருத்தலை நகத்துக்கு உணவு வழங்குவதில் சிரமம் இருப்பதாக அந்த மிருகக்காட்சி சாலை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கு கரணம் என்னவெனில் பாம்பிற்கு 2 மூளைகள் இருப்பதே என கூறப்படுகிறது.

ஆனால் ஒரு உடல் தான். இரையாக ஒரு எலியை விட்டால், ஒரு தலை அதனை உண்ண எத்தணிக்கும். ஆனால் மற்ற தலைக்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல் அது வேறு திசை நொக்கி நகர முனையும். இதனால் குழப்பம் உருவாகிறது என தெரிவித்துள்ளார்.