வரும் நவம்பர் முதல் கொரோனா தடுப்பூசி- தயாராகும்படி மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தல்.!

Subscribe our YouTube Channel

கொரோனா வைரஸானது உலகளாவிய ரீதியில் பரவி தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டு இருக்கிறது. அதற்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.இந்நிலையில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனமும் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றது.இந்நிலையில் தங்கள் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி அவசரகால பயன்பாட்டுக்காக வருகிற ஜனவரி மாதத்தில் கிடைக்கும் என ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.

மேலும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆஸ்ட்ரா செனகா நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி வெகு விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

லண்டனில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனைக்கு ஆஸ்ட்ரா செனகா தடுப்பு மருந்தின் முதல் பேட்ச் வரும் நவம்பர் முதல் வாரத்தில் வழங்கப்படும் எனவும் இதற்கு தயராகுமாறும் மருத்துவமனைக்கு அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக இங்கிலாந்தின் பிரபல பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.