வெங்காய விலை அதிகரித்ததன் எதிரொலி- ரூ. 2.35 லட்சம் மதிப்புள்ள வெங்காயம் திருடிய 4 பேர் கைது.!

Subscribe our YouTube Channel

நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை 75 ரூபாய்க்கும் மேல் அதிகரித்துள்ளது.வெங்காயத்தின் விலை அதிகரிக்க அதிக மழை மற்றும் பதுக்கல் காரணமாக உற்பத்தி செய்யும் பகுதிகளில் விளைந்துள்ள காரீப் வெங்காயப்பயிர் சேதமடைந்ததே காரணம் என கூறப்படுகிறது.தங்கத்தின் விலைக்கு இணையாக தற்போது வெங்காயத்தின் விலை உள்ளதாக மீம்ஸ்களும் காணமுடிகின்றது. இந்நிலையில் புனேயில் கடந்த 21ம் திகதி விவசாயி ஒருவரிடம் இருந்து 4 பேர் கொண்ட கும்பல் சுமார் 2.35 லட்சம் பெறுமதியான 58 வெங்காய முட்டைகளை திருடி சென்றுள்ளனர்.

அதனை தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பந்தப்பட்ட 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.அவர்களிடம் இருந்து 2 லட்சம் மதிப்புள்ள 49 மூட்டைகள் கைப்பற்றப்பட்டதாகவும் மீதமுள்ள மூட்டைகளை ஏற்கனவே திருடர்கள் விற்றுவிட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.