இங்கிலாந்து மகாராணி எலிசபெத் அருந்தும் மதுவின் அளவு-தகவலை வெளியிட்ட செய்தி நிறுவனம்

Subscribe our YouTube Channel

இங்கிலாந்தின் மகாராணி 2ம் எலிசபெத் ஒரு நாளுக்கு அருந்தும் மதுவின் அளவு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு இண்டிபெண்டன்ட் எனும் செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி தினமும் மதிய உணவு வேளைக்கு முன்னர் ஜின் மற்றும் டுபோனெட் ஒயின் மதுவகைகளை ஒன்றாக கலந்து அதனுடன் எலுமிச்சை மற்றும் ஐஸ் கட்டிகளை கலந்து அருந்துவார்.அத்துடன் மதிய உணவு உண்ணும் போதே ஒயின் மதுவையும் அருந்துவார் என கூறப்பட்டுள்ளது. மாலை வேளையில் ஜின் மற்றும் வெர்மவுத் கலந்த கார்ட்டினி (காக்டெய்ல்) மதுவை மகாராணி அருந்துவார். இவை எல்லாவற்றின் அளவை கணக்கிடும் போது ஒரு நாளைக்கு 6 யூனிட் அளவு மதுவை அவர் அருந்துகிறார்.

வாரத்துக்கு 40.6 யூனிட் அளவாக இது உள்ளது.சாதாரண குடிமக்கள் வாரத்துக்கு 14 யூனிட் அளவு வரை மட்டுமே மது பயன்படுத்த வேண்டும் என்பது அந்நாட்டு அரசின் அறிவுறுத்தலாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.