திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளையன் முருகன் உடல்நலகுறைவால் உயிரிழப்பு.!

Subscribe our YouTube Channel

திருச்சியில் சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜுவல்லரி என்ற பிரபல நகைக்கடையில் கடந்த ஒக்டொபர் 2ம் திகதி சுமார் 13 கோடி மதிப்புள்ள பொருட்டாக கொள்ளையடிக்கப்பட்டது. இந்த திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடிவந்த நிலையில் சுரேஷ் என்பவர் செங்கம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.அவரிடம் இருந்து திருவாரூரை சேர்ந்த முருகன் பெங்களூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.அதனை தொடர்ந்து பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் அவரது உடல்நிலை மிகவும் மோசமானது.

அதனால் அவர் பெங்களுருவில் உள்ள சிவாஜி நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.அந்த நிலையில் அவருக்கு கை,கால்கள் செயல்படாமல் போய்விட்டது. பேச முடியாமல் அவதிப்பட்டுள்ளார்.அத்ததுடன் அவருக்கு எயிட்ஸ் உள்ளிட்ட பல்வேறு நோய்களும் இருந்துள்ளது.அவற்றுடன் தொடர்ந்து போராடிவந்த வர நேற்று இரவு 11 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின் முருகனின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என பெங்களூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த முருகனின் மீது சென்னையில் 12 வழக்குகளும் கர்நாடகாவில் 46 வாக்குகளும் ஆந்திராவில் ஒரு வழக்கும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.