வாட்ஸ் ஆப் வெளியிட்ட புதிய அப்டேட்-இனிமேல் ஆல்வேஸ் mute.!

Subscribe our YouTube Channel

வாட்ஸ் ஆப் பயனாளர்களின் தேவையை கருத்தில் கொண்டு அவ்வப்போது புதிய அப்டேட்டுகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள புதிய அப்டேட்டில் chat செய்யும் போதும் குழுவில் chat செய்யும் போதும் ஒலியுடன் நோடிஃபிகேசன் திரையில் தோன்றும்.இதை தேவையற்றதாக கருதுவோருக்கு குறுகிய கால அடிப்படையில் 8 மணி நேரம், அல்லது ஒரு வாரம் அல்லது ஒரு அதிகபட்சமாக ஒரு ஆண்டு வரையிலும் மியூட் செய்துகொள்ளும் வசதியை வாட்ஸ் ஆப் வழங்கி வந்தது.குழுவில் பிறரின் உரையாடல்களை அசௌகரியமாக கருதுவோருக்கு இது ஒரு பயனுள்ள வசதியாக இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்த வசதியில் மேலும் ஒரு மாற்றத்தை வாட்ஸ் அப் நிறுவனம் கொண்டு வந்துள்ளது. இனி வாட்ஸ் ஆப் சாட்களை நிரந்தரமாக மியூட்டில் வைத்துக் கொள்ளலாம்.இந்த வசதியினை பீட்டா வெர்ஷனில் சோதனை செய்து பார்த்துவந்த நிலையில் தற்போது புதிய அப்டேட்டாக வாட்ஸ் அப் வெளியிட்டிருக்கிறது.