மனைவியின் நடவடிக்கையில் சந்தேகம்-கோடரியால் கொடூரமாக தாக்கி கொலை செய்த கணவன்.!

Subscribe our YouTube Channel

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் அசோக் சைனி.இவர் மனைவி சுதீஷ் சைனியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 14ம் திகதி மனைவி சைனி குளியலறையில் இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.இந்நிலையில் கணவர் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்படவே அவரை தேடி வந்தனர். அதனை தொடர்ந்து கணவர் அசோக்கை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் கூறியதாவது சம்பவத்தன்று என் மனைவியின் செல்போனை பார்க்க முயன்றேன்.

ஆனால் செல்போனை என்னிடம் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் அன்று முழுவதும் எங்கள் இருவருக்குள்ளும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.அன்று நள்ளிரவில் மனைவி தூங்கி கொண்டிருந்த நேரம் பார்த்து கோடரியால் கடுமையாக தாக்கி கொலை செய்தேன்.

தொடர்ந்து குளியலறையில் சடலத்தை போட்டு விட்டு தலைமறைவாக்கினேன் எனக் கூறியுள்ளார்.அத்துடன் சமூக வலைத்தளங்களில் மனைவி அடிக்கடி வீடியோக்களை பதிவிட்டு வந்ததாகவும் அது தனக்கு பிடிக்க வில்லை எனவும் அவரது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரை கொலை செய்தென் என வாக்குமூலம் அளித்த்துள்ளார்.