நடிகர் சிம்புவுக்கு தாயாரால் கொடுக்கப்பட்ட மிக விலை உயர்ந்த பரிசு…!

Subscribe our YouTube Channel

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வளம் வருபவர் சிம்பு.இயக்குனர்,நடிகர்,கதாசிரியர் என பன்முகம் கொண்ட இவர் குழந்தை நட்சத்திரமாக 1984 ம் ஆண்டு ‘உறவை காத்த கிளி ‘என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து 12 படங்களில் நடித்த அவர் 2002ம் ஆண்டு வெளியான காதல் அழிவதில்லை திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக வளம் வருகிறார்.இதனை தொடர்ந்து சமீபத்தில் சிம்பு தனது YouTube சேனலில் வெளியிட்ட ‘come back’ வீடியோ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் உருவான ஈஸ்வரன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.அத்துடன் வெங்கட்பிரபு இயக்கிய மாநாடு திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் சிம்புவின் அம்மா நடிகர் சிம்புவிற்கு மிகவும் பிடித்த கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.அந்த காரின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.மேலும் நேற்று சிம்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.