பிக்பாஸ் இல்லத்துக்குள் இன்று நுழையவிருக்கும் போட்டியாளர்…!

Subscribe our YouTube Channel

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.இதனை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.வர இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கமல்ஹாசன் போட்டியாளர்களிடம் பேசுவார்.அத்துடன் ஒரு போட்டியாளர் பிக்பாஸ் இல்லத்தை விட்டு வெளியேற்றப்படுவார். அந்த வகையில் இதுவரை ரேகா,வேல்முருகன்,சுரேஷ் சக்கரவர்த்தி ஆகியோர் வெளியேறியுள்ளனர்.

அத்துடன் வைல்ட் கார்டு நுழைவாக அர்ச்சனா மற்றும் பாடகி சுசி இல்லத்தினுள் நுழைந்தனர்.இந்நிலையில் 50வது நாளான இன்று பிக்பாஸ் இல்லத்துக்குள் மேலும் ஒரு போட்டியாளர் நுழையவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல்நிலவு உள்ளிட்ட சில தொடர்களில் நடித்த அசீம் இன்று பிக்பாஸ் இல்லத்தினுள் போட்டியாளராக நுழையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிவானியுடன் ஏற்கனவே கிசுகிசுக்கப்பட்டவரான அசீம் பிக்பாஸ் இல்லத்துக்குள் சென்றால் பாலாவுடன் முறுகல் நிலை ஏற்படும் என பலராலும் பேசப்பட்டு வருகிறது.