பாலாஜிக்கு எதிராக உருவாக்கப்பட்ட குறும்படம்…பிக்பாஸ் இல்லத்தில் இந்தவாரம் முதல் குறும்படம் ஒலிபரப்பாகுமா ..? வீடியோ

Subscribe our YouTube Channel

மக்களின் பெரும் வரவேற்பைப்பெற்ற விஜய் தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.இந்தவாரம் போட்டியாளர்களுக்கு கால்சென்டர் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ரியோ மற்றும் பாலாஜிக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.அப்பொழுது பாலா விரல்களை சொடக்கு போட்டவாறு ‘யார் யாருக்கெல்லாம் ஹீரோ, ஹீரோயினாக வேண்டுமோ என்னிடத்தில் சண்டை போட வாங்க” என்பது போல் கடுமையாக பேசினார்.அதனை தொடர்ந்து ஆரி ஏனைய போட்டியாளர்களிடம் பாலாஜியை பற்றி பேசிக்கொண்டு இருக்கும் போது பாலாஜி குறுக்கிட்டார்.

அப்போது பாலாஜி செய்த தவறை சுட்டிக்காட்டினார் ஆரி.ஆனால் பாலாஜி அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.நான் அப்படி பேசவில்லை என முதலில் கூறிய அவர் சக போட்டியாளர்கள் இல்லை பாலா நீ கூறினாய் என சொன்னபோது ஆறி சொன்ன உடல்மொழியில் சொல்லவில்லை எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பாலா சொன்னது தவறு என நிரூபிக்க நெட்டிசன்கள் குறும்பட வீடியோ வெளியிட்டுள்ளனர்.இந்த வார இறுதியில் உலகநாயகன் கமல்ஹாசன் இது பற்றி பேசுவாரா என்பது இந்தவார இறுதியிலே தெரியவரும்.