போதைக்காக சானிட்டைசரை குடித்த 7 பேர் உயிரிழப்பு-2 பேர் கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதி..!

Subscribe our YouTube Channel

ரஷ்யாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இதுவரை மொத்தம் 20 லட்சத்து 64 ஆயிரத்து 748 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.35ஆயிரத்து 778 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் ரஷ்யாவில் 24ஆயிரத்து 822 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இந்நிலையில் ரஷ்யாவின் மேற்கு பகுதியின் டாட்டின்ஸ்கி மாவட்டத்தில் உள்ள டொமடோர் கிராமத்தில் விருந்து உபசார நிகழ்வு நடைபெற்றுள்ளது. அந்நிகழ்வில் மது பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

அதனை தீர்க்க அங்கிருந்தவர்கள் சானிட்டைசரை குடித்துள்ளனர். இந்த சம்பவத்தில் சானிட்டைசர் குடித்த 7 பேர் உயிரிழந்ததுடன் 2 நபர்கள் கோமா நிலைக்கு சென்றுள்ளனர்.அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சையைக்கப்பட்டு வருகிறது.