Subscribe our YouTube Channel
இந்நிலையில் நாமினேஷன் கார்டு என்ற புதிய முறையை அறிமுகம் செய்தார் பிக்பாஸ். நாமினேஷனில் லிஸ்டில் இருப்போரில் யார் இந்தக் கார்டைப் பெறுகிறாரோ அவர் வீட்டிலிருக்கும் ஒரு போட்டியாளரை நாமினேட் செய்யலாம் என்று கூறப்பட்டது.இதையடுத்து நாமினேஷன் கார்டைப் பெற்ற அனிதா, சம்யுக்தாவை நாமினேட் செய்தார்.
அதனால் அனிதா வெளியேற்றப்படுவோர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு சம்யுக்தா சேர்க்கப்பட்டார். எனவே இந்த வாரம் சம்யுக்தா அல்லது நிஷா வெளியேற்றப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக பிக்பாஸ் ரசிகர்கள் கணித்தனர். ஆனால் யாரும் எதிர்பார்க்காத ஜித்தன் ரமேஷ் இந்த வாரம் குறைவான வாக்குகளைப் பெற்று வெளியேற்றப்பட்டிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
பிக்பாஸ் இல்லத்தில் தனக்கு தேவையில்லாத விடயங்களில் கருத்து கூறாமல் இருந்து வருகிறார் ஜித்தன் ரமேஷ்.அத்துடன் இந்த வாரம் நடந்த கால் சென்டர் டாஸ்க்கில் ரம்யா கேட்ட கேள்விகளுக்கு பொறுமையாக சரியாக பதிலளித்து பலரது பாராட்டையும் பெற்றார்.
இதையடுத்து இந்த வாரத்தின் சிறந்த போட்டியாளராகவும் ஜித்தன் ரமேஷ் தேர்வாகியுள்ளார். இந்நிலையிலேயே இந்த வாரம் ப்கபாஸ் இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.