கால்களை இழந்த நாய்க்கு சக்கர நாற்காலி தயாரித்த உரிமையாளர்…!

Subscribe our YouTube Channel

செல்ல பிராணிகள் என்றாலே பலருக்கும் அலாதி பிரியம்.நாள் முழுவதும் செல்லப் பிராணிகளுடனேயே செலவழிப்போரும் உண்டு.வீட்டில் ஒருவரைப்போல அவற்றையும் பராமரிப்போம். அந்த வகையில் கோயம்புத்தூரை சேர்ந்தவர் காயத்ரி.இவர் கொரோனா ஊரடங்கு காலத்தில் 4 வயதான வீரா என்னும் நாயை தத்தெடுத்தார்.நாய்க்கு பின்னங்கால்கள் இல்லத்தை காயத்திரியின் தந்தை நாய் எளிதாக நடப்பதற்கு எதுவாக சக்கர நாற்காலியாக் தயாரிக்க முடிவு செய்தார்.நாயின் இரண்டு பின் கால்களுக்கு பதிலாக இரண்டு சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது.அது இலகுவாக இருப்பதற்காக பிவிசி பைப்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

தற்போது முன் கால்களை பயன்படுத்தி சக்கர நற்காலியில் உட்கார்ந்து நடக்கும் வீராவை பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என காயத்திரி கூறியுள்ளார்.இந்த நாய் சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.காயத்திரியின் தந்தை மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.