தங்க இழைகளால் உருவாக்கப்பட்ட விலை உயர்ந்த முகக்கவசங்கள் விற்பனை…!

Subscribe our YouTube Channel

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் அதில் இருந்து நம்மை பாதுகாக்க முகக்கவசம் அணிதல் அனைத்து நாடுகளிலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.பொது நலன் கருது முகக்கவசம் அணியாதவர்களுக்கு பல நாடுகள் பெருமளவு அபராதத் தொகையினையும் விதித்து வருகின்றன.இது இவ்வாறு இருக்க முகக்கவசம் பாதுகாப்புக்காக அணிவது என்பதை தாண்டி அழகுக்காக அணிதல் என்னும் பொருட்டு சென்று கொண்டிருக்கிறது நிலைமை என்றால் அது மிகையாகாது.

அந்த வகையில் இத்தாலியில் தங்க இழைகளால் ஆன விலை உயர்ந்த முக கவசங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. 200 ஆண்டுகள் பழமையான நெசவு நிறுவனம் ஒன்று இந்த புதுமையான முக கவசங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த விலை உயர்ந்த முக கவசத்திற்கு இத்தாலியில் மட்டுமல்லாது ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஸ்பெயின் போன்ற வெளிநாடுகளில் இருந்தும் ஆர்டர்கள் வந்து குவிவதாக தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.

அத்துடன் ஜெர்மனியைச் சேர்ந்த பெண் ஒருவர் 3 முக கவசங்களுக்கு ஆர்டர் கொடுத்துள்ளதாகவும், ஜெர்மனியில் திரையரங்குகள் திறக்கப்படும் போது, தான் அவற்றை அணிந்து செல்ல ஏதுவாக தயாரித்து தர வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டதாகவும் இந்நிறுவனத்தின் உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.