அரசு மருத்துவமனையில் சிறுமியின் உடலை கடித்து குதறிய நாய்…!வீடியோ

Subscribe our YouTube Channel

உத்திரபிரதேச மாநிலம் சம்பால் மாவட்டத்தில் நேற்று சாலை விபத்து நடந்தது அதில் சிறுமி ஒருவர் உயிரிழந்தார்.அவரது உடல் அரசு மருத்துவமனையில் படிக்கட்டில் அருகில் உள்ள ஸ்ரெச்சரில் வைக்கப்பட்டிருந்தது.அங்கு மருத்துவமனை ஊழியர்கள் யாரும் இல்லை.அந்த நேரத்தில் அங்கு வந்த தெருநாய் ஒன்று சிறுமியின் உடலை கண்டித்துள்ளது.இதனை அங்கிருந்த ஒருவரால் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.இதனை பார்த்த பலரும் அரசு மருத்துவமனை நிர்வாகத்துக்கு தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த சிறுமி மருத்துவமனைக்கு வரும் முன்பே இறந்து விட்டாரா அல்லது வந்தபின்னர் இறந்தாரா? என்ற விவரம் தெரியவில்லை. உரிய நடைமுறைகளுக்கு பிறகு சிறுமியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் தெருநாய் தொந்தரவு அதிகம் இருப்பதாகவும், இதுபற்றி அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக வார்டு பாய் மற்றும் துப்புரவு பணியாளர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் மருத்துவமனை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.