தமிழ்த்திரையுலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் விக்ரம்.இவர் 1990 ஆம் ஆண்டு வெளிவந்த ‘என் காதல் கண்மணி’ என்ற திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தாலும் 1999ம் ஆண்டு வெளிவந்த சேது திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது..இந்த படம் சிறந்த படத்திற்கான தேசிய விருதையும் பெற்றது. பிதாமகன், அந்நியன்,ஐ, இருமுகன் உள்ளிட்ட வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பதில் சிறந்தவர்.இந்நிலையில் இவர் வசித்து வரும் திருவான்மியூரில் உள்ள வீட்டில் வெடிகுண்டு வைப்பட்டுள்ளதாக மர்ம நபரால் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு அகற்றும் ,கண்டறியும் குழுவினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.தொடர்ந்து வீடு முழுவதும் சோதனை செய்யப்பட்டதில் வெடிகுண்டு எதுவும் இல்லை என கண்டறியப்பட்டது.தொடர்ந்து காவல்துறையினரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அந்த விசாரணையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்திலிருந்து இந்த மிரட்டல் வந்ததாக காவல்துறையினர் கண்டுபிடித்தனர். ஏற்கனவே ரஜினி, விஜய் மற்றும் சூர்யா போன்ற முன்னணி நடிகர்கள் வீடுகளுக்கு சமீபத்தில் இதுபோன்று வெடிகுண்டு மிரட்டல் வந்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.