கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த ருசிகரம்-புரபோஸ் செய்த இந்திய இளைஞரின் காதலை உடனே ஏற்றுக் கொண்ட அவுஸ்திரேலிய பெண்…!வீடியோ

Subscribe our YouTube Channel

அவுஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று வருகிறது.நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.அதனை தொடர்ந்து 2வது போட்டி நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இந்திய கிரிக்கெட் ரசிகர் ஒருவர் அவுஸ்திரேலிய பெண் ஒருவரிடம் தனது காதலை ஸ்டேடியத்தினுள் வைத்து வெளிப்படுத்தியுள்ளார். அதனை அப்பெண்ணும் உடனே ஏற்றுக்கொண்டுள்ளார்.அதனை தொடர்ந்து கிரிக்கெட் ஆரவாரத்துடன் அந்த ஜோடி கட்டியணைத்து அன்பை பரிமாறிக்கொண்டனர்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.அதனை பார்த்த நெட்டிசன்கள் ஆட்டத்தை வேண்டுமானால் அவுஸ்திரேலியா கைப்பற்றலாம்.ஆனால் அந்நாட்டு பெண்ணை நான் தான் கைப்பற்றுவேன் என்ற குறிக்கோளோடு இவர் சென்றிருப்பார் போலும் என நகைச்சுவையாக நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.