‘என் பாதுகாவலர் இவர் தான்…’சுசித்ரா இன்ஸ்டாகிராமில் போட்ட ஆன்மீக பதிவு..வாழ்த்தும் இரசிகர்கள்..!

Subscribe our YouTube Channel

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்றுகொண்டு இருக்கிறது.வார இறுதி நாட்களில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவர் என்பது இந்நிகழ்ச்சியின் விதிமுறைகளில் ஒன்று.அந்த வகையில் ரேகா,வேல்முருகன்,சுரேஷ் சக்கரவர்த்தி ஆகியோர் பிக்பாஸ் இல்லத்தை விட்டு வெளியேறியுள்ளனர். இந்த வரம் எந்த போட்டியாளர் வெளியேறப்போகிறார் என மக்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். இந்நிலையில் இப்போட்டியில் வைல்ட் கார்டு நுழைவாக இல்லத்தினுள் சென்றவர் பாடகி சுசித்ரா.

இவரே இந்த வாரம் மக்களின் குறைவான ஓட்டுக்களை பெற்று வெளியேறவுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் தற்போது சுசித்ரா தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் ஆன்மிக பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அவரது பந்த பதிவில் விநாயகரின் படத்தை பதிவிட அவர் My protector என கேப்சன் கொடுத்துள்ளார்.இதிலிருந்து இந்த வாரம் பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேறியது பாடகி சுசித்ரா என்பது உறுதியாகியுள்ளது.