Whatsapp செயலி அறிமுகப்படுத்திய புதிய அப்டேட்-இனி Whatsapp-பில் ஷாப்பிங்கும் செய்யலாம்….!

Subscribe our YouTube Channel

முகநூல் நிறுவனத்துக்கு சொந்தமான பிரபல குறுஞ்செய்தி வழங்கும் நிறுவனம் வாட்ஸ் அப்.இந்த செயலியை உலகம் முழுவதும் உள்ள மக்கள் பயன்படுத்தி வருக்கின்றனர். இந்தியாவில் மட்டும் சுமார் 40 கோடி பேர் பயனாளர்களாக உள்ளனர்.புதிய அப்டேட்டுகளை வழங்குவதில் வாட்ஸ் அப் நிறுவனம் ஆர்வம் காட்டி வருகிறது.அந்த வகையில் இந்த செயலியில் ஷாப்பிங் பட்டன் வசதியை முகநூல் நிறுவனம் அறிமுகஅடுத்தியுள்ளது.இந்த வசதி இந்தியா உள்பட பல்வேறு இதர நாடுகளிலும் வழங்கப்பட்டு வருகிறது.ஷாப்பிங் பட்டன் வசதியில் சாட் செய்வதை போன்றே பொருட்களை ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம்.

மேலும் இந்த அம்சம் பயனர்கள் வியாபாரங்கள் வழங்கும் பொருட்கள் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளும் வசதியுடன் வழங்கப்பட்டுள்ளது.முன்னதாக இதுபோன்ற அம்சத்தை இயக்க பயனர்கள் அந்தந்த வியாபாரங்களின் பிஸ்னஸ் ப்ரோபைலை க்ளிக் செய்ய வேண்டிய நிலை இருந்து வந்தது.

தற்சமயம் ஷாப்பிங் பட்டனை பார்த்ததும், பயனர்கள் க்ளிக் செய்து குறிப்பிட்ட வியாபார பொருட்கள் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளலாம்.இந்த அம்சம் பயனர்கள் மட்டுமின்றி வியாபாரங்கள் தங்களின் பொருட்களை மக்களிடம் கொண்டு சேர்க்க உதவியாக இருக்கும்.

இதன் மூலம் விற்பனை அதிகரிக்கும்.புதிய ஷாப்பிங் பட்டன் வாட்ஸ்அப் பிஸ்னஸ் அக்கவுண்ட் சாட் ஸ்கிரீன்களில் மட்டுமே காணப்படும். அந்த வகையில், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் சாட் ஸ்கிரீனில் ஷாப்பிங் பட்டன் இடம்பெறாது என்பது குறிப்பிடத்தக்கது.