முதன் முறையாக கணவர் குறித்து மனம் திறந்த நடிகை காஜல் அகர்வால்..!

Subscribe our YouTube Channel

தமிழ் ,தெலுங்கு உள்ளிட்ட மொழிப்படங்களில் முன்னணி கதாநாயகியாக வளம் வந்தவர் காஜல் அகர்வால்.இவர் கடந்த மாதம் 30ம் திகதி தொழிலதிபரான கௌதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து மாலைத்தீவில் தேன்நிலவை கொண்டாடினர். இந்நிலையில் தன்னுடைய கணவர் பற்றி முதன்முறையாக மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார்.அதில் அவர் கூறியதாவது,லன்ச்சுக்கு சென்றது தான் எங்களின் முதல் டேட். அங்கு அவர் கிட்டத்தட்ட என்னை பேட்டி எடுத்தார் எனலாம். ஆனால் அதுவும் ஜாலியாக இருந்தது. என்னிடம் ப்ரொபோஸ் செய்வதற்கு முன்பு என் தந்தையிடம் பேசி அனுமதி வாங்கியிருக்கிறார் கௌதம்.

அவர் கண்டிப்பாக ப்ரொபோஸ் செய்வார் என்று தெரியும். அதனால் அவர் ப்ரொபோஸ் செய்தபோது ஆச்சரியமாக இல்லை. என் தந்தையிடம் முன்பே பேசினாலும் ப்ரொபோஸ் செய்யாவிட்டால் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்றேன்.நானாக பிடித்து அவரை உட்கார வைத்து பார்க்க வைத்தால் தான் படம் பார்ப்பார். இல்லை என்றால் கௌதமுக்கு படம் பார்க்கும் பழக்கம் இல்லை. எங்கள் இருவரில் கௌதம் தான் ரொமான்டிக்.

கௌதமுக்கு அவரின் செல்போன் மீது காதல். தற்போது புது போன் வேறு கிடைத்திருக்கிறது. அந்த காதலை கைவிட்டால் நன்றாக இருக்கும்.எங்களுக்கு இடையே சண்டை வந்தால் கௌதம் தான் முதலில் விட்டுக் கொடுப்பார். கொரோனா வைரஸ் பிரச்சனைக்கு இடையே திருமண ஏற்பாடுகள் செய்தது கடினமாக இருந்தது. திருமணத்திற்கு வந்த வேலையாட்கள், விருந்தாளிகள் என்று அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

திருமணம் நடந்த இடம் சானிடைஸ் செய்யப்பட்டது.அத்துடன் திருமணம் முடிந்த கையோடு புது வீட்டில் குடியேறியது வித்தியாசமான அனுபவம். இப்படி தனி வீட்டில் வசிப்பது புது அனுபவம். வீட்டையும் பார்த்துக் கொண்டு, வேலைக்கும் செல்லும் பெண்கள் மீது எனக்கு எப்பொழுதுமே தனி மரியாதை உண்டு. தற்போது அந்த மரியாதை மேலும் அதிகரித்துள்ளது.

என் மீது அதிக அக்கறை வைத்துள்ளார். அவர் சரியான நேரத்திற்கு சாப்பிட்டாரா, தூங்கினாரா என்பதை நான் பார்த்துக் கொள்கிறேன். நான் எங்காவது சென்றால் பத்திரமாக சென்றேனா.? என் நாள் நல்லபடியாக இருந்ததா என கேட்பார். திருமணத்திற்கு முன்பு இப்படி எல்லாம் இல்லை எனக் கூறியுள்ளார்.