4 மாதத்திலே முடிவுக்கு வந்த காதல் திருமண வாழ்க்கை-பெண்ணின் உயிரை குடித்த வரதட்சணை கொடுமை..!

Subscribe our YouTube Channel

ஓமலூர் அருகே உள்ள பாகல்பட்டி ராமானுர் காலனியை சேர்ந்தவர்கள் தங்கவேல் மற்றும் வள்ளி தம்பதி. இவர்களுக்கு திவ்யா என்னும் மகள் உள்ளார்.இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன் ஜெகதீஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நேற்று முன் தினம் திவ்யா தூக்கிட்டு தற்கொலை செய்த்து கொண்டுள்ளார்.தகவலறிந்து அதிர்ந்து போன பெற்றோர் ஓமலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.அந்த புகார் மனுவில் “எனது மகளின் மரணத்துக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் 50,000, 2 பவுன் தங்கச் சங்கிலி கேட்டு அவற்றை வாங்கி வருமாறு மகளிடம் வரதட்சனை கேட்டு ஜெகதீஸ் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தார். இதன் காரணமாகவே எனது மகள் தற்கொலை செய்து கொண்டார்.

எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.