சிறுமியின் நுரையீரலை வைத்து பூஜை செய்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும்-மூடநம்பிக்கையால் சிறுமி கொலை…!

Subscribe our YouTube Channel

உத்திரபிரதேச மாநிலம் கடம்பூரை சேர்ந்த 6 வயது சிறுமி ஒருவர் கடந்த தீபாவளி தினத்தன்று காணாமல் போயுள்ளார். இந்நிலையில் அச்சிறுமி கான்பூர் பகுதியில் உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளான அங்குல் குரில் (20) மற்றும் பீரன் (31) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். அத்துடன் பரசுராம் மற்றும் ஆறது மனைவி ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பரசுராம் 1999ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளார். இதுவரை அவருக்கு குழந்தைகள் இல்லை.

இதனால் சிறுமியின் நுரையீரலை வைத்து பூஜை செய்தல் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்ற மூடநம்பிக்கையில் மருமகன் அன்குல் மற்றும் அவரது நண்பர் பீரன் ஆகியோரிடம் சிறுமியைக் கடத்தி, நுரையீரலை அகற்றும்படி வற்புறுத்தியுள்ளார்.

இதனை தொடர்ந்து குறித்த சிறுமியை கடத்திய அவர்கள் கொலை செய்வதற்கு முன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்நிலையில் உத்திரபிரதேச மணிலா முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் அவர்களுக்கு விரைவில் தண்டனை வழங்கப்படும் வகையில் இவ்வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என அவர் குறியும்மர்.மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.