தாய்மை இரக்க குணம் நிறைந்தது.தன்னலம் கருத்தாதது என பார்த்தும் கேட்டும் இருப்போம்.தற்போது இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோ அதனை உறுதிப்படுத்தி பார்ப்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்த தனது Twitter பக்கத்தில் வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளார்.அந்த வீடியோவில் பாம்பு ஒன்று எலி குஞ்சை தனக்கு இரையாக்குவதற்காக கவ்விக் கொண்டு செல்கிறது. அதனை தடுக்கும் விதமாக தாய் எலி பாம்பினை தனது பற்களால் துரத்தி கடிக்கிறது. இறுதியில் எலியின் தாக்குதலை தங்க முடியாத அந்த பாம்பு எலி குஞ்சை அங்கேயே விட்டு விட்டு புதருக்குள் சென்று மறைகிறது.
அதன் பின் தனது குட்டியை கவ்விக்கொண்டு தாய் எலி செல்கிறது. இந்த வீடியோவை வெளியிட்ட வனத்துறை அதிகாரி “தாய்மையின் தைரியம் என்ன என்பதை நீங்கள் பார்த்தது இல்லை என்றால் இதைப்பாருங்கள்… பாம்பின் வாயிலிருந்து தனது குழந்தையை எலி மீட்கிறது என்றால் நம்ப முடிகிறதா?” எனப் பதிவிட்டுள்ளார்.