கடன் வழங்கும் 5 செயலிகளை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கி கூகுள் அதிரடி…!

Subscribe our YouTube Channel

வளர்ந்து வரும் இன்றைய நவீன உலகில் அனைத்து தேவைகளும் விரல் நுனியில் அடங்கி விடுகிறது.இவை பல சமயங்களில் சுலபமாகவும் சில சமயங்களில் தொந்தரவாகவும் அமைகிறது. வங்கிகளில் கடன் பெரும் வசதி உள்ளது.ஆனாலும் வங்கிகளில் கடன்களை பெறுபவர்களின் தொகுதிகளின் அடிப்படையிலேயே வழங்கப்படுகிறது.இந்நிலையில் தற்போது கொரோனா காலம் என்பதால் மக்கள் பண நெருக்கடியில் தவித்து கருகின்றன.அதனை சமாளிக்க மிக எளிதாக கடன் வழங்கும் இணையவழி நிதி நிறுவனங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.

செல்போனின் இந்த செயலிகளை பதிவிறக்கம் செய்து கொண்டால்போதும் ஆவணங்களுக்கு ஏற்றாற்போல 3 ஆயிரம்,5ஆயிரம் என உடனடி கடன்களை இந்த இணைய வழி நிதி நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. மக்களும் இதுபோன்ற நிதி நிறுவனங்களை நடுவதால் கடன் வழங்கும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன.

அந்த நிறுவனங்களின் விதிமுறைகளை அறியாமால் கடன் பெற்று கடனுக்கு அதிக வட்டி , அபாராத வட்டி, கூட்டுவட்டி உள்ளிட்ட இன்னல்களுக்கு மக்கள் ஆளாவதாகவும் கடனை திரும்ப செலுத்த வழியுறுத்தி இந்த நிறுவனங்கள் மிரட்டல்களில் ஈடுபடுவதாகவும் மத்திய அரசுக்கு பூகார்கள் அதிகரித்த வண்ணம் இருந்தன.

இந்நிலையில் அங்கீகாரம் இன்றி செயல்பட்டு வரும் இணையவழி கடன் வழங்கும் 5 நிறுவனங்களில் செயலிகளை கூகுள் தனது பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது.இது தொடர்பாக கூகுள் நிறுவனம் அறிக்கையினை வெளியிட்டுள்ளது.அந்த அறிக்கையில் கூகிள் பிளே டெவலப்பர் கொள்கைகள் பயனர்களைப் பாதுகாப்பதற்கும் பாதுகாப்பாக வைப்பதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

மேலும் மக்களை ஏமாற்றும் மற்றும் சுரண்டலில் ஈடுபடும் தனிநபர் கடன் வழங்கும் நிதி நிறுவனங்களிடம் இருந்து பயனாளர்களை பாதுகாக்க உதவும் வகையில் எங்கள் நிதிச் சேவை கொள்கையை சமீபத்தில் விரிவுபடுத்தினோம். இதில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டதை தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.