சங்கிலியால் கட்டப்பட்ட ஸ்கார்பியோ காரின் புகைப்படத்தை ஊரடங்குடன் ஒப்பிட்டு Twitter-ல் பதிவிட்ட மகேந்திரா குழும தலைவர்.!

Subscribe our YouTube Channel

நாட்டின் பல நகரங்களிலும் கார் திருட்டு சம்பவங்கள் அதிகமாக நடைபெறுகின்றன.அதனை கட்டுப்படுத்த பல்வேறு கார் உற்பத்தி நிறுவனங்களும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அதற்கமைவாக பல புதிய தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.இந்நிலையில் மஹிந்திரா ஸ்கார்பியோகார் உரிமையாளர் ஒருவர் மரத்துடன் காரை சங்கிலியால் கட்டி வைத்துள்ளார்.இந்த புகைப்படம் மஹேந்திர குளுமைத்தலைவர் ஆனந்த் மஹிந்திராவின் கவனத்துக்கு சென்றுள்ளது.அதனை தனது Twitter பக்கத்தில் பதிவிட்ட அவர் உயர் தொழில்நுட்ப பொதுமுடக்கம் என்பது சரியான தீர்வு இல்லை என்றாலும் குறைந்தபட்சம் இது உரிமையாளரின் உரிமையை காட்டுகிறது.

என்னைப் பொருத்தவரை இந்த படம் ஊரடங்கை நான் எப்படி உணர்ந்தேன் என்பதை காட்டுகிறது. இந்த வார இறுதியில் இந்த சங்கிலியை நான் உடைக்க முயற்சிக்கப் போகிறேன் (முகக்கவசத்துடன்) என பதிவிட்டுள்ளார்.