செக்ஸ் பொம்மையை காதலித்து திருமணம் செய்து கொண்ட பிரபல பாடிபில்டர்…!

Subscribe our YouTube Channel

கஜகஸ்தான் நாட்டை சேர்ந்தவர்பிரபல பாடி பில்டரான யூரி டோலோச்கோ.இவர் கடந்த 2019ம் ஆண்டு மார்கோ எனப்படும் செக்ஸ் பொம்மையை வாங்கி வீட்டில் வைத்திருந்துள்ளார். அதனுடன் தொடர்ந்து 8 மாதங்களாக பாலியல் உறவிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் குறித்த செக்ஸ் பொம்மையை காதலிப்பதாக அறிவித்தார்.இதனால் பலரும் அவருக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.இதனால், யாரும் யோசிக்காத நிலையில், சற்று வித்தியாசமாக யோசித்த அவர் நான் அந்த செக்ஸ் பொம்மையை திருமணம் செய்யப்போவதாக அறிவித்தார்.

யூரி டோலோச்கோவின் பொம்மையுடனான காதலுக்கு அவரது குடும்பத்தினர் உறவினர் நண்பர்கள் என பலரும் கடும் எதிர்ப்பு மற்றும் கண்டனங்களையும் தெரிவித்து வந்தனர்.இந்நிலையில் பொம்மைக்கும் தனக்குமான திருமண அறிவிப்பை இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் என அறிவித்திருந்தார்.அனால் கொரோனா வைரஸ் காரணமாக திருமணம் தள்ளி போனது.

இதனையடுத்து கொரோனா தொற்று சற்று குறைந்து உள்ள நிலையில் மீண்டும் கடந்த ஓகஸ்ட் மாதம் திருமணம் நடத்த அவர் திட்டமிட்டு இருந்தார்.யூரி டோலோச்கோ எதிர்பாராத விதமாக, திடீரென்று ஒரு சிறிய விபத்தில் சிக்கி காயம் அடைந்து உள்ளார். இதனால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதன் காரணமாக, அவரது திருமணம் மீண்டும் தள்ளிப் போனது.

இந்த சூழலில் செக்ஸ் பொம்மையான மார்கோவிற்கு சிறந்த மருத்துவர்கள் மூலம் பிளாஸ்டிக் சர்ஜரி மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பான அறிவிப்பையும், அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். அதில், “மார்கோ தனது தோற்றத்தில் அதிகம் அக்கறை கொள்வதாகத் தான் உணர்வதாகவும்” யூரி தெரிவித்து இருந்தார்.அவர் காயத்திலிருந்து முழுவதுமாக குணமான நிலையில் தற்போது ஒரு வழியாக யூரி டோலோச்கோ – மார்கோ திருமணம் தற்போது நடந்து முடிந்து உள்ளது.

இது தொடர்பான வீடியோ ஒன்றையும் யூரி டோலோச்கோ இத்போது வெளியிட்டுள்ளார்.முக்கியமாக, அந்த வீடியோவை “இனியும் தொடரும்” என்ற ஆங்கில வாசகத்துடன், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டு உள்ளார்.சிலிகான் வகை பொம்மையான செக்ஸ் பொம்மையான மார்கோவுடன் தான் அதிக நேரம் செலவிட்ட புகைப்படங்களை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.