புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நடிகர் தவசி இன்று காலமானார்…!

Subscribe our YouTube Channel

தமிழ் திரைப்பட நடிகர் தவசி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அவர் உயிர் பிரிந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளன.நான் கடவுள், ஜில்லா, வீரம், சுந்தரபாண்டியன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் தவசி.வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் சூரிக்கு தந்தையாக நடித்திருந்தார்.இத்திரைப்படத்தில் ‘கருப்பன் குசும்புக்காரன்’ என்ற வசனத்தின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன் சிகிச்சைக்கு மிகவும் சிரமப்படுவதாகவும் உதவி செய்ய கோரியும் வீடியோ ஒன்றினை வெளியிட்டிருந்தார். அதனை தொடர்ந்து அவரின் சிகிச்சைக்கு நடிகர்கள் உள்பட பலரும் பணஉதவி செய்தனர்.இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி நடிகர் தவசி உயிரிழந்துள்ளார்.

அவரது மறைவை அடுத்து பலர் அவருக்கு இரங்கலை தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் அவரது “ஆத்மா சாந்தியடையட்டும்” எனப் பதிவிட்டு வருகின்றனர்.