6 வயதில் நாசியில் சிக்கிய நாணயம்….53 வயதில் உடலில் பாதிப்பை ஏற்படுத்தியது…!

Subscribe our YouTube Channel

ரஷ்யாவை சேர்ந்த சுமார் 59 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மூச்சு விட சிரமப்பட்டுள்ளார்.இதனால் மருத்துவமனைக்கு சென்ற வருக்கு மருத்துவர்களால் ஸ்கேன் மற்றும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஸ்கேன் செய்து பார்த்ததில் அவரது வலது பக்க நாசியில் நாணயம் ஒட்டியிருப்பதை கண்டுபிடித்தனர்.இது பற்றி அந்நபரிடம் விசாரித்த பொது அவர் கூறியதாவது எனக்கு 6 வயது இருக்கும் போது மூக்கில் நாணயத்தை வைத்து விளையாடினேன்.அது எதிர்பாராத விதமாக என் நாசியில் சிக்கிக் கொண்டது.எனது தாயார் மிகவும் கண்டிப்பானவர்.

அதனால் அவரிடம் சொல்லாமல் மறைத்தது விட்டேன் என கூறியுள்ளார்.இந்நிலையில் 53 வருடங்களின் பின் அவரது உடல்நிலையை பாதித்துள்ளது.அத்துடன் அவரது நாசியில் எண்டோஸ்கோபி அறுவை சிகிச்சையின் மூலம் மருத்துவர்கள் நாணயத்தை வெளியில் எடுத்துள்ளனர்.தொடர்ந்து அந்நபருக்கு மூச்சுத்திணறல் ஏற்படவில்லை.இதனால் அவர் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்.