Subscribe our YouTube Channel
இதன் மூலம் பயனாளர்கள் வாட்ஸ் அப் செயலியின் மூலமே பண பரிமாற்றம் செய்ய முடியும்.அத்துடன் முந்தய பரிமாற்ற தகவல்கள் உள்ளிட்டவற்றை எப்போது வேண்டுமானாலும் ஆராய்ந்து கொள்ளும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.முதற்கட்டமாக இந்த அம்சம் 2 கோடி பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.வாட்ஸ் அப் பே சேவைக்கு இந்தியாவில் அனுமதி கிடைத்திருப்பது பற்றி முகநூல் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் கூறியதாவது இந்தியா முழுவதும் வாட்ஸ் அப் பே சேவைக்கு, ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
இதை சாத்தியமாக்கிய அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.வாட்ஸ் அப் மூலமாக உங்கள் நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் எந்த கட்டணமும் இன்றி நீங்கள் பணம் செலுத்த முடியும். இந்த பரிவர்த்தனை மிகவும் பாதுகாப்பானது எனக் கூறியுள்ளார்.