இனிமேல் இந்த வகை செல்போன்களில் வாட்ஸ் அப்பை பயன்படுத்த முடியாது – கடும் அதிர்ச்சியில் குறித்த செல்போன் பயனர்கள்….!

Subscribe our YouTube Channel

முகநூல் நிறுவனத்துக்கு சொந்தமான பிரபல குறுஞ்செய்தி வழங்கும் நிறுவனம் வாட்ஸ் அப்.இந்த செயலியை உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான மக்கள் பயன்படுத்தி வருக்கின்றனர். இந்தியாவில் மட்டும் சுமார் 40 கோடி பேர் பயனாளர்களாக உள்ளனர்.நண்பர்கள் முதல் அலுவலக செயல்பாடுகள் வரை வாட்ஸ் அப்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில் எதிர் வரும் 2021ம் ஆண்டு முதல் வாட்ஸ் அப் செயலி சில குறிப்பிட்ட செல்போன்களில் பயன்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது ஐஓஎஸ்-9 மற்றும் ஆண்ட்ராய்டு 4.0.3 ஆகியவற்றுக்கு குறைவான இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ் அப் செயலி இனி இயங்காது.இதனால் இந்த இயங்கு தளங்களைக் கொண்ட ஸ்மார்ட் பயனாளர்கள் உடனே அப்டேட் செய்ய வேண்டும் என இல்லையேல் இயங்காது என வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக ஐபோன் 4S, 5, 5S, 6, 6S போன்ற மொடல்களில் வாட்ஸ் அப் இயங்காது.வாட்ஸ் அப் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு குறித்த செல்போன் பயனாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.