கொரோனா ஊரடங்கிலும் நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டி – குறிப்பிட்ட சாதியினர் மட்டும் பங்கேற்பு- மக்கள் ஆவேசம்..!

Subscribe our YouTube Channel

தெலுங்கானாவில் பிராமணர்கள் மட்டுமே கலந்துகொள்ளும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுள்ளது.இது குறித்த விளம்பர பதிவு சமூக வலைத்தளங்களில் பரவி கடும் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது.இந்தியாவில் பல்லின சாதி மத மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.இந்திய அரசியலமைப்பு சட்டம் எந்தவொரு பாகுபாட்டையும் அனுமதிப்பதில்லை. இருப்பினும் நாட்டில் சாதி, மதம் என பல பிரிவினைகள் காணப்படுவதுடன் தற்போது பல கொடூரமான வழிகளில் வெளிப்பட்டு பிரிவினை வாதத்தையும் வன்முறையையும் ஏற்படுத்தியுள்ளது.அதாவது தெலுங்கானாவின் தலைநகர் ஹைத்ராபாத்தில் டிசம்பர் 25 மற்றும் 26 திகதிகளில் பிராமணர் கிரிகெட் போட்டி நடைபெற்றுள்ளது.

பிராமணர்களை தவிர மற்ற எந்த சாதியினருக்கும் இந்த போட்டியில் கலந்து கொள்ள அனுமதி இல்லை என பிஎஸ்ஆர் மைதானத்தில் நடைபெற்றுள்ளது. உள்ளாட்சி அமைப்பினரின் அனுமதி பெற்ற பின்னரே இந்த போட்டி நடத்தப்பட்டதாகவும், கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் அனைத்தும் கடைபிடிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இதனை ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்தியுள்ளது. போட்டியின் அமைப்பாளர்கள் தங்கள் சமூகத்தை மேம்படுத்தவே இப்போட்டி நடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இதன் விளம்பர பதிவு சமூக ஊடகங்களில் பரவி பலரது கண்டனங்களும் உள்ளாகியுள்ளது.