முடங்கிய சில மணி நேரங்களிலேயே மீண்டும் செயல்பாட்டுக்கு வந்த Google சேவைகள்…!

Subscribe our YouTube Channel

உலகின் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான கூகுளின் பெரும்பான்மையான சேவைகள் இன்று உலகமெங்கும் முடங்கியிருந்தன.YouTube, Gmail, Google டாக்ஸ், Google அசிஸ்டன்ட் தொடங்கி முக்கிய சேவைகள் அனைத்துமே முடங்கின. Twitterல் பலரும் இதைக் குறிப்பிட்டு பதிவுகளிட #YoutubeDown, #GoogleDown, #GoogleOutage போன்ற ஹேஷ்டேக்குகள் உலகளாவிய ரீதியில் வைரலானது. தொடர்ந்து இந்திய நேரப்படி சுமார் 5 மணிக்கு பலருக்கு கூகுள் சேவைகள் தடைப்பட்டன.அதனை தொடர்ந்து தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சர்வர் முடங்கியுள்ளதாகவும் விரைவில் சரி செய்யப்படும் எனவும் கூகுள் நிறுவனம் விளக்கம் தெரிவித்தது.

அதேபோல கோளாறு சரி செய்யப்பட்டு பிரச்னை குறித்து தெரிவிக்கப்படும் என YouTube நிறுவனமும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது முடங்கிய சில மணி நேரங்களிலேயே செயல்படத் தொடங்கியுள்ளது.