புவியீர்ப்பு இல்லாத சர்வதேச விண்வெளி நிலையத்தில் பயிரிடப்பட்ட முள்ளங்கி – நாசா வெளியிட்ட காணொளி

Subscribe our YouTube Channel

நாசாவின் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையம் புவியீர்ப்பு வளையத்துக்கு மேலே அமைந்துள்ளதால் அங்குப் புவியீர்ப்பு சக்தி கிடையாது.இதனால் அந்த இடத்தை மைக்ரோ கிராவிட்டி என அழைப்பர்.அத்துடன் அங்கு வெப்பம் இல்லாததால் மனிதர்கள் கவச உடை அணிந்தே செல்ல வேண்டும்.எதிர்காலத்தில் சந்திரன், செவ்வாய் போன்றவற்றுக்கு மனிதர்களை அனுப்ப நாசா திட்டமிடப்பட்டுள்ளது. அங்கு செல்லும் அவர்களுக்கு அவர்களுக்கு ஃப்ரெஷ்ஷான உணவு அளிக்க வசதியாகக் காய்கறிகளை விண்வெளி நிலையத்தில் பயிரிட நாசா முடிவு செய்துள்ளது. அதையொட்டி முதற்கட்டமாக இங்கு சோதனை முறையில் முள்ளங்கி பயிரிடப்பட்டது.

இங்கு செடிகள் வேர் விட அத்தியாவசியமான புவியீர்ப்பு சக்தி இல்லை என்பதால் தலையணை போன்ற அமைப்பில் உரம் மற்றும் நீர் கிடைக்கும் வகையில் இச்செடிகள் பயிரிடப்பட்டன. அத்துடன் செடிக்கு வெப்பம் ஊட்ட சிவப்பு மற்றும் நீல ஒளி உமிழும் விளக்குகள் அமைக்கப்பட்டன.

இந்த செடிகள் வளர்வதை அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் அமைந்துள்ள கென்னடி விண்வெளி கட்டுப்பாடு அறையில் இருந்து விஞ்ஞானிகள் கண்காணித்து வந்துள்ளனர்.தற்போது முள்ளங்கி செடிகள் வெற்றிகரமாக வளர்ந்துள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.