ஆரிக்கு கிடைத்த பெருமை….இசையமைப்பாளர் சத்யா வெளியிட்ட அசத்தலான பாடல்….! வீடியோ

Subscribe our YouTube Channel

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிவாரத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது.வரும் ஞாயிற்றுக்கிழமை இறுதி போட்டி நடைபெறவுள்ள நிலையில் வெற்றியாளரை தேர்ந்தெடுக்கும் மக்களின் வாக்கு பதிவுகள் நடந்து வருகின்றன. இதுவரை 12 பேர் வெளியேறியுள்ள நிலையில் தற்போது ஆரி, ரியோ, பாலாஜி, சோம், ரம்யா, கேபி ஆகிய 6 பேர் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர். தற்போது பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் உள்ளே சென்றுள்ளனர். இந்நிலையில் பிக்பாஸ் வெற்றிக்கோப்பை யாருக்கு என பலரும் எதிர்பார்த்துள்ளனர். இதுவரை வாக்குகள் அடிப்படையில் ஆரி அர்ஜுனன் முன்னிலையில் உள்ளார்.

இந்தநிலையில் நட்பு அடிப்படையில் ஆரிக்காக ‘ஆரி வேற மாறி’ என்ற லிரிக்கல் இசை ஆல்பத்துக்கு இசை அமைத்துள்ளார் சி.சத்யா. ‘ஆரி வேற மாறி’ சிங்கிள் டிராக் இன்று மாலை 6.00 மணிக்கு வெளியாகி உள்ளது.

ஆரி ஏற்கனவே சி.சத்யா இசையமைத்த ‘நெடுஞ்சாலை’ ‘உன்னோடு கா’ படத்தில் நாயகனாக நடித்தவர். தற்போது இந்த கூட்டணி ‘அலேகா’ திரைப்படத்திலும் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.