பிக்பாஸில் ஆரி பங்கேற்கவில்லை எனில் நான் தான் வெற்றியாளர்…. பகீர் பேட்டியளித்த போட்டியாளர்…!

Subscribe our YouTube Channel

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் வெற்றிகரமாக விரைவு பெற்றது.இதில் ஆரி அர்ஜுனன் மக்களின் பேராதரவை பெற்று வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் பிக் பாஸ் போட்டியாளர் வேல்முருகன் தற்போது அளித்திருக்கும் பேட்டியில் பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றியும் ஆரி பற்றியும் நமக்கு தெரியாத பல விடயங்களை கூறியுள்ளார்.அவர் அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, “ஆரி வெளியிலிருந்து மக்கள் தொலைக்காட்சியில் பார்ப்பது போலவே அவர் உள்ளிருந்து விளையாடினார். உள்ளே இருப்பது மட்டும் தான் அவர். ஆனால் அவரது செயலும் எண்ணமும் வெளியே மக்கள் எப்படி சிந்திக்கிறார்கள் என்பதை பொறுத்து தான் இருக்கும்.அத்துடன் அவரது சிந்தனை முழுக்க மக்கள் எப்படி ஒரு விஷயத்தை பார்ப்பார்கள் என யோசிப்பார்.

அதற்கு மிகப் பெரிய திறமை வேண்டும். அதை அழகாக செய்தார் கடைசி வரை ஜெயித்தார். அத்தோடு ஆரி இல்லை என்றால் யார் ஜெயித்திருப்பார்கள் என்ற கேள்விக்கு. “ஆரி இல்லை என்றால் ஒருவேளை நான் அந்த வீட்டில் இருந்திருந்தால் நான் ஜெயித்து இருப்பேன்” என்று தன்னம்பிக்கையுடன் அவர் கூறியுள்ளார்.

மேலும் அதற்கு அடுத்ததாக “சொல்ல வந்த விடயங்களை துணிச்சலாக பேசும் பாலா கோபத்தை மட்டும் விட்டுவிட்டு இருந்தால் அவரும் அடுத்தபடியாக டைட்டில் ஜெயிதிருக்க வாய்ப்பு இருப்பதாக” அவர் தன் கருத்தை கூறியுள்ளார்.