பிக்பாஸ் வெற்றிக்கு பின் ஆரி அர்ஜுனன் நடிக்கும் முதல் திரைப்படம்….!

Subscribe our YouTube Channel

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 ல் கலந்து கொண்ட நடிகர் ஆரி அர்ஜுனன் அவர்கள் மக்களின் பேராதரவை பெற்று வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 4 இறுதிப்போட்டி நடைபெற்றது. இந்நிலையில் வெளியே வந்த பின் ஆரிக்கு புது திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அபின் இயக்கம் இத்திரைப்படத்தில் வித்யா பிரதீப் கதாநாயகியாக நடிக்கிறார்.இப்படத்துக்கான பூஜையில் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸும் கலந்து கொண்டுள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.அத்துடன் ஆரி நடித்த பகவான் மற்றும் அலேகா போன்ற திரைப்படங்கள் வெளியீட்டுக்காக தயார் நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.