விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக பல திருப்பங்களுடன் நடந்து முடிந்துள்ளது. இறுதிப்போட்டிக்கு ஆரி அர்ஜுனன்,பாலா முருகதாஸ்,ரம்யா பாண்டியன்,சோம்,ரியோ ஆகியோர் தகுதி பெற்றிருந்தனர். இந்நிலையில் ஆரி அர்ஜுனன் அவர்கள் மக்களின் பேராதரவை பெற்று பிக்பாஸ் வெற்றிக்கிண்ணத்தை கைப்பற்றினார்.பிக்பாஸ் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு 16கோடி வாக்குகளுக்கு மேல் பெற்று வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.மிகவும் சாதுர்யமாகவும் துணிச்சலுடனும் விளையாடிய ஆரி அவர்களுக்கு அதிக அளவில் இரசிகர்கள் குவிய தொடங்கினர்.அதற்கு முக்கிய காரணமாக அவரது நேர்மையும், மன உறுதியும், சமூக அக்கறையும் ஒரு காரணம்.
இப்படி எந்தவித எதிர்பார்ப்புமின்றி களமிறங்கி இன்று அனைவரையும் கவர்ந்திருக்கும் ஆரி நிச்சயம் பிக்பாஸ் வரலாற்றில் ஒரு சிறந்த முன்னுதாரணமாக இருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நேற்றைய தினம் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின் அவர் முதல் முறையாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ள்ளார்.
அதில் அவர் பதிவிட்டுள்ளதாவது “எல்லாம் புகழும் வாக்களித்த உங்களுக்கே….” என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது மிகவும் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.