பணப்பெட்டியை எடுத்தது பாலாவா… ஆரியா…?வெற்றியடையப்போவது அன்பு அணியினரா…?

Subscribe our YouTube Channel

இறுதி கட்டத்தை நோக்கி பிக்பாஸ் நிகழ்ச்சி பயணித்து கொண்டிருக்கிறது.எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது.பிக்பாஸ் சீசன் 4ன் வெற்றியாளரை தேர்ந்தெடுக்கும் பணியில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.இதுவரை வழங்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை அடிப்படையில் ஆரி அர்ஜுனன் முன்னிலையில் உள்ளார்.இதனால் கோப்பையை வெல்லப்போவது யார்..? என்னும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில் சூட்கேஸ் வாங்கிய போட்டியாளர் யார்..? என்னும் விவாதம் சமூக வலைதளங்களில் சூடாக நடைபெற்று வருகிறது.

ஆரி, பாலாஜி இருவரில் ஒருவர் தான் சூட்கேஸ் வாங்கியதாகவும் பேசப்படுகிறது.இதனால் இறுதியில் வெற்றியடைய போவது அன்பு அணியா என்ற கேள்வியும் சமூக வலைத்தளங்களில் எழுப்பப்பட்டு வருகிறது.