ஊரடங்கு எதிரொலி – கணவரை சங்கிலியால் கட்டி சாலையில் நடைப்பயிற்சிக்கு கூட்டிச் சென்ற மனைவி…! வீடியோ

Subscribe our YouTube Channel

கனடாவில் கணவரை சங்கிலியால் கட்டி சாலையில் நாயை போன்று கூட்டிச் சென்ற மனைவியின் செயல் பலரையும் நகைப்புக்குள்ளாக்கியுள்ளது.கனடாவில் கொரோனா பரவலால் அதிகமாக உள்ள காரணத்தினால் அதனை கட்டுக்குள் கொண்டுவர அந்நாட்டு அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.அதன் ஒரு நடவடிக்கையாக இரவு நேரங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அதாவது பொதுமக்கள் இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணியாளர்கள், செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள் நடைப்பயிற்சி கூட்டி செல்வது போன்றவற்றிற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஷேர்ப்ரூக் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவருடன் ஊரடங்கு நேரத்தில் வெளியே சென்றுள்ளார்.அந்த நேரத்தில் காவல்துறையினரிடம் இருந்து தப்பிக்க கணவரை நாய் போல சங்கிலியால் கட்டி அழைத்து சென்றுள்ளார்.இதனை அவதானித்த காவல்துறையினர் அப்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்பெண் கூறியதாவது,நான் என் நாயுடன் நடைப்பயிற்சி செல்கிறேன். செல்லப்பிராணிகளை நடைப்பயிற்சி அழைத்து செல்ல ஊரடங்கிலும் அனுமதி உண்டு என காவல்துறையினரிடம் வாதாடியுள்ளார். அவரை கண்டித்த காவல்துறையினர் ஊரடங்கை மீறி வெளியே சுற்றியதற்காக அபராதம் விதித்தனர். இந்திய மதிப்பில் 3.44 லட்சம் அபராத தொகை விதிக்கப்பட்டுள்ளது.