உத்திரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தை சேர்ந்த பெண்ணொருவர் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.அதில் இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டை ஏற்படுவது காரணமாக கூறியுள்ளார்.அதன்படி உள்ளூர் காவல்நிலையத்தில் கணவர் மீது புகார் அளித்துள்ளார். இந்நிலையில் குடும்ப பிரச்சனைகள் திறக்கப்படும் ஆலோசனை மையத்துக்கு இருவரும் அதிகாரிகளால் அழைக்கப்பட்டனர்.அதன் அடிப்படையில் அங்கு வந்த கணவர் அருமையான காதல் பாட்டு ஒன்றை பாட அதைக் கேட்ட மனைவியின் மனதும் மாறியது. மேலும் இதனை ஐபிஎஸ் அதிகாரி மதுர் வர்மா என்பவர் கடந்த 2017ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் தனது Twitter பக்கத்தில் வெளியிட்டுருந்தார்.
A couple had a fight. Few months back, wife filed a case against her husband in Jhansi. But husband sang a song for her in the police station and convinced her. Love triumphs pic.twitter.com/2frzPOKpGn
ஆனால் தற்போது இந்த செய்தி நீதிமன்றத்திற்கு விவாகரத்து கேட்டு சென்ற மனைவியை கணவன் பாட்டு பாடி மாற்றிய கூறி வைரலாக பரப்பப்பட்டு வருகிறது.இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.அத்துடன் சம்பவம் தொடர்பான மீம்ஸ்களும் பகிரப்பட்டு வருகின்றன.