மீண்டும் அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு….!

Subscribe our YouTube Channel

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில் பலத்த கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் ஆரம்பத்தில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் நாளடைவில் உலக நடுகல் அனைத்திலும் பரவி பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.இதனை கட்டுப்படுத்த தடுப்பூசி தயாரிக்கும் பணியில் உலக நாடுகள் முயன்று வரும் நிலையில் அதிவீரியம் கொண்ட உருமாறிய கொரோனா வைரஸ் தற்போது இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகளில் பரவத்தொடங்கியுள்ளது. பிரான்சில் கொரோனா வைரஸின் பரவல் ஏற்கனவே அதிகமாக உள்ளது.இந்நிலையில் உருமாறிய கொரோனவை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடுமுழுவதும் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

15 மண்டலங்களில் இரவு நேர ஊரடங்கை மேலும் இரண்டு மணி நேரம் நீடித்து பிரான்ஸ் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மற்ற பகுதிகளில் ஊரடங்கு இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இருப்பினும் அந்தக் குறிப்பிட்ட 15 பகுதிகளில் மட்டும் மாலை 6 மணிக்கு ஊரடங்கு தொடங்கும். தலைநகரான பாரிசில் ஊரடங்கும் நேரம் நீட்டிக்க படவில்லை.

அத்துடன் ஜனவரி 7ம் திகதி முதல் திரையரங்குகள் மற்றும் கச்சேரி அரங்குகள் மீண்டும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவை அனைத்தும் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என அரசு அதிரடியாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.