இரசிகர்கள் யாரும் கடையடைப்பிலோ போராட்டத்திலோ ஈடுபட வேண்டாம் – நகைச்சுவை நடிகர் சதிஷ்…!

Subscribe our YouTube Channel

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் சிவகார்த்திகேயன்.நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் சதிஷ்.சிவகார்த்திகேயன் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த காலத்திலிருந்தே சதீஷுடன் நல்ல நட்பு. மெரினா திரைப்படத்தில் ஆரம்பித்து பல வெற்றி படங்களில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்துள்ளார் சதீஷ். இவர்களின் காம்போ திரையில் இணைந்தாலும் பொது நிகழ்ச்சிகளில் இணைந்தாலும் என்டர்டெயின்மென்டிற்கு பஞ்சம் இருக்காது.இந்நிலையில் சமீபத்தில் இருவரும் சேர்ந்து கிரிக்கெட் வீரர் தங்கராசு நட்ராஜனுடன் வீடியோ காலில் உரையாடினர்.ஐ.பி.எல் போட்டிகள் மற்றும் அவுஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட பந்துவீச்சாளர் யார்க்கர் புகழ் நட்ராஜனுக்கு தொலைபேசி வாயிலாக இன்பதிர்ச்சி கொடுத்தனர்.

இந்நிலையில் சதீஷ் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரின் இணைய பதிவுகள் வைரலாகி வருகிறது. லயோலா கல்லூரி நடத்திய கருத்து கணிப்பில் அழகான ஆண்கள் அதிகம் வசிக்கும் இடத்தை சேலம் பிடித்துள்ளதாம். சதீஷ் சென்னையில் குடியேறிய பின் நடத்தப்பட்ட கருத்து கணிப்பே இது.

அதனால் தான் சென்னை முதலிடம் பெறவில்லை என கமெண்ட் செய்துள்ளார் சிவகார்த்திகேயன். இதற்கு பதிலளித்த சதீஷ், ரசிகர் ரசிகையர் யாரும் கடையடைப்பிலோ போராட்டத்திலோ ஈடுபட வேண்டாம் என அறிவுரை கூறியுள்ளார் சதீஷ்.