67 ஆண்டுகளாக குளிக்காத நபர்…. தண்ணீர் என்றாலே பயமாம்…!

Subscribe our YouTube Channel

தெற்கு ஈரானின் தேஜ்கா என்னும் கிராமத்தை சேர்ந்தவர் அமோவ் ஹாஜி.இவர் கடந்த 67 ஆண்டுகளாக குளிக்கவில்லை என கூறப்படுகிறது.உடலை தண்ணீரில் கூட நனைத்ததில்லையாம். குளித்தால் தான் நோய்வாய் பட்டுவிடுவோம் என்று அமோவ் ஹாஜி நம்புகிறார். இதனால், தண்ணீர் பக்கம் எட்டி பார்க்காததால் உடல் முழுக்க புழுதி படிந்து அழுக்காகவே அமோவ் ஹாஜி காட்சியளிக்கிறார். தன் இளமைக் காலத்தில் நடந்த சில சோக சம்பவங்களால் அமோவ் ஹாஜி தனியாகவே வசிக்கிறார்.அமோவ் ஹாஜியின் உணவு பழக்கமும் வித்தியாசமாகவே இருக்கிறது. இறந்த விலங்குகளின் அழுகிய உடற் பாகங்களை சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். முள்ளம்பன்றி கறி அமோவ் ஹாஜிக்கு மிகவும் பிடித்தமானது.நாள் ஒன்றுக்கு 5 லிட்டர் தண்ணீர் குடிப்பதை இவர் வழக்கமாக வைத்துள்ளார்.

தற்போது 87 வயதாகும் அமோவ் ஹாஜிக்கு புகைப்பிடிக்கும் பழக்கமும் உண்டு. அடிக்கடி தன் உடல் எப்படியிருக்கிறது கார் கண்ணாடிகளில் பார்த்துக் கொள்கிறார். உடல் எவ்வளவுக்கு எவ்வளவு அழுக்காக இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு நோய் வராது என்பது அவரின் நம்பிக்கையாக இருக்கிறது. இவருக்கு யாரும் முடி வெட்ட முன் வராததால் முடியை தீயை வைத்து கருக்கிக் கொள்கிறார்.பல ஆண்டுகளாக குளிக்காத ஒரே மனிதர் ஹாஜி மட்டுமல்ல.

1974ல் திருமணமானவுடன் வாரணாசியைச் சேர்ந்த குரு கைலாஷ் சிங் குளிக்க மறுத்துவிட்டார். கைலாஷ் சிங்கிற்கு தொடர்ந்து ஏழு மகள்கள் பிறந்தனர். ஆண் குழந்தைக்கு அவர் ஆசைபட்டார். அவர் குளிப்பதை நிறுத்தினால் அவருக்கு ஒரு மகன் இருப்பார் என சாமியார் ஒருவர் கூறியதையடுத்து அவர் இந்த முடிவுக்கு வந்துள்ளார்.