கூகுளின் பிழையை சுட்டிக்காட்டிய தமிழக இளைஞரின் பெயரை கூகுளின் Hall of Fame-ல் இணைத்து மரியாதை..!

Subscribe our YouTube Channel

செயலிகள் முதல் தகவல் பரிமாற்ற முறை வரை அனைத்திலும் முக்கிய பங்கு வகித்து வரும் கூகுளில் பிழைகளை கண்டு பிடிப்பவர்களுக்கு கூகுள் சன்மானம் வழங்கி பாராட்டி வருகிறது.அந்த வகையில் கூகுள் செயலி ஒன்றில் பிழை கண்டுபிடித்தமைக்காக தமிழக இளைஞர் ஒருவருக்கு உலகின் முன்னணி நிறுவனமான கூகுள் பரிசு தொகை வழங்கியுள்ளது. சென்னை மாவட்டம் ஆவடி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீராம் கேசவன்.

பொறியியல் பட்டதாரியான இவர் கூகுளில் ‘APPSheet’ எனப்படும் அப்ளிகேஷன் தயாரிப்பதற்கான செயலியில் வாடிக்கையாளரின் தகவல்கள் மற்றும் அவர்களின் படைப்புகள் திருடப்படுகிறது என்ற பிழையை கூகுள் நிறுவனத்திற்கு சுட்டிக்காட்டி அனுப்பினார். இதனை அங்கீகரித்துள்ள கூகுள் அவருக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.2,30,000 பரிசு தொகை வழங்கி பாராட்டியுள்ளது.