பிக்பாஸ் இறுதிப்போட்டிக்கு பின் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளதாக கமல்ஹாசனின் மகள்களான சுருதி ஹசன் மற்றும் அக்ஷரா ஹாசன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். மருத்துவமனையில் இருந்து இன்னும் ஐந்து நாட்களின் பின் விடுதிரும்புவர்.சிறிது நாள்கள் ஓய்வுக்கு பின் மீண்டும் மக்களை சந்திப்பர் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
அத்துடன் அவருக்காக பிரார்த்தனை செய்த அணைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.தனது அறுவை சிகிச்சை குறித்து கமல்ஹாசன் பிக்பாஸ் இறுதி போட்டியின் போது கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.