7வது திருமணத்துக்கு ஆசைப்பட்டு வசமாக சிக்கிக்கொண்ட 63 வயது முதியவர்…6 வது மனைவியை பிரிய அவர் கூறிய காரணம்…?

Subscribe our YouTube Channel

இந்தியாவின் குஜராத் மாநிலம் சூரத் பகுதியை சேர்ந்தவர் அய்யூப் தேகியா.63 வயதான இவர் கடந்த செப்டம்பர் மாதம் அவரை விட சுமார் 21 வயது இளமையான ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். ஆயினும் கடந்த சிஸம்பர் மாதமே மனைவியை விட்டு புரிந்துள்ளார்.அதற்கு ‘அவள் எனதருகில் உறங்குவதற்கு கூட விரும்புவதில்லை. தொற்று வியாதிகள் உருவாகி விடும் என பயப்படுகிறார். எனக்கு நீரிழிவு நோய், இருதய நோய் என பல பிரச்சனைகள் உள்ளது. இதனால் எனக்கு உடலுறவு செய்து கொள்வதற்கு மனைவி வேண்டும் என தேகியா தெரிவித்துள்ளார். தேகியாவின் முதல் மனைவி அதே கிராமத்தில் தனது ஐந்து பிள்ளைகளுடன் தற்போதும் வசித்து வருகிறார். முதல் மனைவியின் ஐந்து பிள்ளைகளுக்கு 20 முதல் 35 வயதுக்குள் இருக்கும் என கூறப்படுகிறது.

இவரது 6வது மனைவியான 42 வயது பெண்மணி தேகியாவின் பின்புலம் குறித்து விசாரித்து பார்த்ததில் தான் அவருக்கு ஏற்கனவே ஐந்து திருமணம் நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.இதனால் அதிர்ச்சியடைந்த அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.தேகியா திருமணம் செய்த 6வது மனைவி முன்னதாக விதவையாக இருந்துள்ளார்.

அதனை பயன்படுத்தி அவருக்கு அதிக நகைகள் மற்றும் பணம் கொடுத்து கவனித்து கொள்வதாக கூறி அவரை திருமணம் செய்துள்ளார் தேகியா.ஆனால், கடந்த டிசம்பர் மாதம் அந்த பெண்ணை அவரது சகோதரியின் வீட்டில் விட்டுச் சென்ற அவர் அதன் பிறகு மனைவியை அழைத்துச் செல்ல வரவேயில்லை. அத்துடன் மற்ற மனைவிகளிடம் இருந்து ஏன் அவர் பிரிந்து சென்றார் என்பது குறித்தும் தேகியா எதுவும் கூறவில்லை.

6வதாக திருமணம் செய்து கொண்ட பெண் உடலுறவு கொள்ள மறுத்ததால் இனி அவருடன் வாழ விருப்பமில்லை என தேகியா தெரிவித்துள்ள நிலையில், சம்மந்தப்பட்ட நபர்களின் அறிக்கை எடுத்த பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.