அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது நெட் பவுலராக சென்று 3 விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணிக்காக விளையாடி பலரது கவனத்தையும் ஈர்த்தவர் தங்கராசு நடராஜன். டி20, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அறிமுக போட்டியிலேயே விக்கெட்களை வீழ்த்தி தனது துல்லியமான விளையாட்டை வெளிப்படுத்தினார்.நடராஜன் அவுஸ்திரேலிய தொடரில் விளையாட ஆரம்பித்தது முதலே டேவிட் வார்னர் வாழ்த்தி வருகிறார்.அவுஸ்திரேலிய அணி தோல்வியை தழுவியதால் அந்நாட்டு ஊடகங்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் என பலரும் விரக்தியில் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் நடராஜனுக்கு வாழ்த்து தெரிவித்து Twitter ல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அவர் நடராஜனுக்கு தமிழல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது தமிழ் கேட்பதற்கு வேறு மாதிரி இருந்தாலும் அவரது ஸ்போர்ட்மேன்ஷிப்பை பலர் பாராட்டி வருகின்றனர்.நடராஜனை நட்டு என குறிப்பிட்ட டேவிட் வார்னர் நீங்கள் ஒரு லெஜெண்ட் என புகழ்ந்துள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.